மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
டி.ராஜேந்தரால் "மோனிகா என் மோனலிசா" என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் மும்தாஜ். அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் அவரால் வளர முடியவில்லை. காரணம் நடிப்பு திறமை இல்லாமல் வெறும் கவர்ச்சி மட்டுமே இருந்ததால். குஷி படத்தின் மூலம் கவர்ச்சியான சிறு வேடங்களில் நடிப்பது, ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவது என்று டிராக் மாறினார். டி.ராஜேந்தருக்கு ஜோடியாக வீராசாமி படத்தில் நடித்ததோடு தன் சினிமா கேரியருக்கு தானே முடிவுரை எழுதிக் கொண்டார் என்றும் சொல்லலாம். அறிமுகப்படுத்தியவரோ வீட்டுக்கும் அனுப்பி வைத்தார் என்றும் சொல்லலாம். மும்தாஜ் நடித்த "திக் திக்" என்ற ஒரு படம் மட்டும் வெளியாக வேண்டி உள்ளது. அதுவும் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இருந்தாலும் மும்தாஜ் அசரவில்லை, நடிகர் சங்க பொறுப்பு, நட்சத்திர கலை விழாக்கள் என பிசியாகவே இருந்தார். ஒரு கட்டத்தில் அதிலிருந்தும் விலகினார். நீண்ட நாட்களாக பொது நிகழ்ச்சிக்கும், பொது இடங்களுக்கும் வராமல் இருந்ததால் திருமணமாகிவிட்டது, குழந்தை பிறந்து விட்டது என்றெல்லாம் வதந்திகள் பரவியது.
இவற்றை பொய்யாக்கும் வகையில் மலையாளத்தில் தனது புதிய கணக்கை துவக்கி இருக்கிறார் மும்தாஜ். மக்பூல் சல்மான் இயக்கும் "பிரிவியூ" என்ற படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் புகழ் பெற்ற நடிகையாக இருந்த மும்தாஜ். தன் அளவுக்கு செல்வாக்கு கொண்ட நடிகரை திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்துக்கு பிறகு இவருக்கு மார்க்கெட் குறைந்துவிட, நடிகருக்கு மாஸ் ஏறிக்கொண்டே போகிறது. இன்னொரு இளம் நடிகரை திருமணம் செய்ய முயற்சிக்கிறார். அதை எதிர்த்து இவர் எப்படி போராடுகிறார் என்பது மாதிரியான கதையாம். இளம் நடிகையாக நடிப்பவர் லட்சுமிராயாம்.
சில நடிகர்களோட நிஜகதை மாதிரியே இருக்கே...