பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து |
படம் : வெயில்
வெளியான ஆண்டு : 2006
நடிகர்கள் : பசுபதி, பரத், பாவனா, ஸ்ரேயா ரெட்டி, மாளவிகா
இயக்கம் : வசந்தபாலன்
தயாரிப்பு : எஸ் பிக் ஷர்ஸ்-
தோற்றவனின் கதையை உணர்வுப்பூர்வமாக கொடுத்து, மாபெரும் வெற்றி பெற்றது, வெயில்! இயக்குனர் ஷங்கர், தன் சிஷ்யர் வசந்தபாலனுக்காக, இப்படத்தை தயாரித்தார். தன் நிஜ வாழ்க்கையில் இருந்தே, வெயில் படத்தின் கதாபாத்திரங்களை உருவாக்கி இருந்தார், வசந்தபாலன்.
விருதுநகரில், தான் வாழ்ந்த குழந்தை பருவத்தை பற்றி, கதாநாயகன் முருகேசன் சொல்வது போல் படம் ஆரம்பமாகிறது. தந்தையின் கண்டிப்புக்கு பயந்து, இளம் பருவத்தில் வீட்டில் இருந்து வெளியேறும் முருகேசன், தியேட்டர் ஒன்றில் பணி செய்கிறார். அங்கு அவருக்கு காதல் கிடைத்து, கை நழுவுகிறது; தியேட்டரும் மூடப்படுகிறது. தோல்வியுற்ற மனிதனாக, 20 ஆண்டுகளுக்கு பின், சொந்த ஊர் திரும்பும் முருகேசன், சந்திக்கும் சோதனைக்களம் தான், படத்தின் இரண்டாம் பகுதி.
விருதுநகர் மக்களின் கிராமிய வாழ்வியலை, அப்படியே படம் பிடித்திருந்தனர். முருகேசனாக, பசுபதி வாழ்ந்திருந்தார். அவரது வாழ்நாள் கதாபாத்திரம் அது. சொந்த ஊரில் கால் பதிக்கும்போது ஏற்படும் நடுக்கம் முதல், தம்பியிடம் அறிமுகமாகும் காட்சி வரை, அவ்வளவு துல்லியமாக, முருகேசன் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
ஜி.வி.பிரகாஷ்குமார், இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே, உருகுதே மருகுதே, வெயிலோடு விளையாடி... உள்ளிட்ட அற்புதமான பாடல்களை கொடுத்திருந்தார். நா.முத்துக்குமாரின் வரிகளில், வெயிலோடு விளையாடி... பாடல், நம் பால்ய காலத்தை நினைவூட்டியது.
மதியின் கேமரா, விருதுநகரின் வெக்கையை அற்புதமாக படம்பிடித்தது. வறட்டு பிடிவாதமிக்க தந்தையாக, ஜி.எம்.குமார், தம்பியாக பரத், பசுபதியின் பால்யகால தோழி ஸ்ரேயா என, படத்தில் இடம்பெற்ற முக்கிய கதாபாத்திரங்கள், அழுத்தமாக உருவாக்கப்பட்டிருந்தன.
வெயில், நம் நெஞ்சை சுட்டது!