'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சினிமா உலகை பொறுத்தவரை நடிகைகள் என்ன தான் பிரபலமானவர்களாக, திறமையானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கான சம்பளம் என்பது ஹீரோக்களை ஒப்பிடும் போது மிகவும் குறைவு. இதுகுறித்து தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார் சமந்தா.
அவர் கூறுகையில், ''நடிகைகளுக்கு சம்பளம் என்பது குறைவான அளவே தரப்படுகிறது. ஒரு நடிகை முதல் மூன்று நடிகைகளில் ஒருவராக முன்னணியில் இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் ஹீரோக்களை ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே உள்ளது. அந்த சம்பளமானது முதல் 20 நடிகர்கள் பட்டியலில் இல்லாத நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை விட குறைவானதாகவே உள்ளது. இதை சுட்டிக்காட்டி நடிகைகள் சம்பளத்தை அதிகமாக கேட்டால் பிரச்சினையாக்கி விடுகிறார்கள். ஆனால் ஹீரோக்கள் படத்துக்குப்படம் கோடிகளை உயர்த்தினாலும் மறுபேச்சு பேசாமல் கொடுக்கிறார்கள். இது என்ன நியாயம் என்று தனது கருத்தினை துணிச்சலாக தெரிவித்துள்ளார் சமந்தா.