Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அமெரிக்காவில் உணவகம் திறக்கிறார் பிரியங்கா சோப்ரா

08 மார், 2021 - 11:22 IST
எழுத்தின் அளவு:
Priyanka-chopra-to-open-indian-restaurant-in-Newyork

உலக அழகியான பிரியங்கா சோப்ரா நடிகையாக அறிமுகமானது தமிழில் தான். விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தார். அதன் பிறகு பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாறியவர். இப்போது ஹாலிவுட் நடிகை. ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியங்கா, கணவருடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலேயே செட்டிலாகிவிட்டார்.

தற்போது ஹாலிவுட் படங்கள், டி.வி.தொடர்களில் நடித்து வரும் பிரியங்கா, நியூயார்க் நகரில் சோனா என்ற பெயரில் இந்திய உணவகம் ஒன்றை தொடங்குகிறார். இதற்கான முதல் பூஜை இந்து முறைப்படி சமீபத்தில் நடந்தது. அதில் கணவர் நிக் ஜோன்சுடன் பிரியங்கா கலந்து கொண்டார். அடுத்த மாதம் இந்த உணவகம் திறக்கப்படுகிறது.

இதுகுறித்து பிரியாங்கா சோப்ரா கூறியிருப்பதாவது: நியூயார்க்கில் சோனா என்ற பெயரில் ரெஸ்டாரென்ட் துவங்க உள்ளேன். இந்திய உணவு பிரியர்களுக்காக இந்த மாத இறுதியில் சோனா திறக்கப்பட உள்ளது. இதில் இந்திய உணவோடு இந்தியர்களின் அன்பும் சேர்த்து பரிமாறப்படும். என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நான் ராஜ நாகத்தை போன்றவன் - மிதுன் சக்ரவர்த்திநான் ராஜ நாகத்தை போன்றவன் - மிதுன் ... 'கங்குபாய் கத்தியவாடி' படத்திற்கு எதிர்ப்பு 'கங்குபாய் கத்தியவாடி' படத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nadakamedai - chennai,இந்தியா
08 மார், 2021 - 17:37 Report Abuse
nadakamedai அட்ரஸ் இருந்த கொடுங்க ஹோட்டலில் சாப்பிடு விட்டு வரேன் ...நடிகை சம்பாதித்த காசுக்கு என்ன வேண்டுமானாலும் பண்ணுவாங்க ..கடைசியில் எல்லாம் பறி போன உடன் இந்த சமுதாயம் தான் இதுக்கு காரணம் என்று இந்தியாவை குறை சொல்வார்கள் ..ஹிந்தி சினிமாவே கண்டுக்காத போது தமிழ் சினிமா நியூஸ் ல என்ன முக்க துவம் இந்த நடிகைக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in