பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'பாய்ஸ்' படத்தில் நடிகராக அறிமுகமானவர் தமன். இசைக் குடும்பத்தில் இருந்த வந்த தமன் அதன்பின் நடிப்பில் ஆர்வம் காட்டாமல் இசையமைப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டினார்.
தமிழ், தெலுங்கில் பல படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வராமல் இருந்தார். தெலுங்கில் அவர் இசையமைத்து கடந்த வருடம் வெளிவந்த 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் பாடல்கள் பெரும் ஹிட்டானதைத் தொடர்ந்து தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
தமிழில், ஏஆர் முருகதாஸ் - விஜய் மீண்டும் இணைவதாக இருந்த படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், அந்தப் படம் கைவிடப்பட்டது. அதில் மிகவும் வருத்தப்பட்ட தமன், விரைவில் விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பேன் என தனது ரசிகர்களுடனான சமூக வலைத்தள சாட்டில் ரசிகர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்தார்.
தமிழில் சீக்கிரமே மற்ற முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா ஆகியோரது படங்களுக்கும் இசையமைக்கும் ஆர்வத்தில் இருக்கிறேன் என தமன் தெரிவித்துள்ளார்.
தற்போது தெலுங்கில் நான்கு படங்களுக்கும், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தலா ஒரு படத்திற்கும் இசையமைத்து வருகிறார் தமன்.