டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்க உள்ள படத்தை 'டாக்டர்' படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறும் என முன்னரே தகவல் வெளியாகி இருந்தது.
தற்போது அதை உறுதி செய்யும் விதத்தில் ரஷ்யாவில் லொகேஷன் தேடலில் உள்ளார் படத்தின் இயக்குனர் நெல்சன். அவருடைய சமூக வலைத்தளத்தில் ரஷ்யாவில் அவர் எடுத்த சில புகைப்படங்களைப் பகிர்ந்து தான் இப்போது ரஷ்யாவில் உள்ளதை அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த கொரானோ காலகட்டத்தில் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது என்பது சிரமமாக உள்ளது. இந்நிலையில் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. நாளுக்கு நாள் மீண்டும் கொரானோ பரவல் அதிகரித்தும் வருகிறது. இருப்பினும் இப்படத்தின் படப்பிடிப்பை தகுந்த முன்னேற்பாட்டுடன் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
'மாஸ்டர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் 65 படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.