விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! |

மகாநடி படத்தை தொடர்ந்து தெலுங்கில் மீண்டும் நேரடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான்.. இயக்குனர் ஹனு ராகவாபுடி இயக்கவுள்ள இந்தப்படம் குறித்த அறிவிப்பு, கடந்த வருடமே வெளியானாலும் இன்னும் படத்திற்கு டைட்டில் வைக்கப்படவில்லை.. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மும்மொழிகள் தயாராகும் இந்த படம் 1964-ம் ஆண்டில் நடைபெறும் வகையில் ஒரு ப்ரீயட் காதல் கதையாக உருவாகவுள்ளது
இந்தப்படத்தில் லெப்டினென்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரியாக துல்கர் சல்மான் நடிக்கிறார். இந்தப்படத்தில் பூஜா ஹெக்டேவை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என கடந்த வருடமே சொல்லப்பட்டு வந்தது.. இந்தநிலையில் தற்போது சூப்பர் 60, பட்லா ஹவுஸ் ஆகிய படங்களில் நடித்த பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிப்பார் என தெரியவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது..