'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா. ஒரு படத்திற்கு அவர் வாங்கும் சம்பளம் 5 கோடி வரை என்கிறது கோலிவுட் வட்டாரம். மற்ற நடிகைகள் அவருடைய சம்பளத்தில் பாதி வரை தொட்டாலே அதிகம்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி' படத்தில் அறிமுகமானவர். அதன்பின் இங்கு நடிக்க வரவேயில்லை. தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடிக்க உள்ள படத்திற்கு பூஜா ஹெக்டேவை கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதற்காக அவருக்கு 3.5 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். பிரபாஸ் ஜோடியாக 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, அந்தப் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு மேலும் பிரபலமாகலாம்.
அதோடு, பூஜாவிற்கு தெலுங்கு, ஹிந்தியிலும் மார்க்கெட் உள்ளதால் அவ்வளவு சம்பளத்தைக் கொடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். பூஜா மீண்டும் தமிழுக்கு வந்தால் நயன்தாராவுக்குப் போட்டியாக மாறவும் வாய்ப்புள்ளது.