ஒரு நேர்மையாளனின் கதை - மனம் திறந்த நந்தா பெரியசாமி | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “ஒருதலை ராகம்” | 2024 - முத்திரை பதித்த முத்துக்கள்... | தாயைக் காத்த தனயன், உரியடி, பைரவா - ஞாயிறு திரைப்படங்கள் | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு |
தமிழ் சினிமாவின் பாடல்கள் உலக அளவில் கூட டிரண்டாகி வருகிறது. கொல வெறி, ரவுடி பேபி பாடல்கள் பெரிய சாதனை படைத்தது. சிவகார்த்திகேயன் மகள் பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.
தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் படத்தில் இடம் பெற்ற செல்லம்மா... பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. அனிருத் இசை அமைத்த இந்த பாடலை சிவகார்த்திகேயனே எழுதியிருந்தார். அனிருத் மற்றும், ஜோனிடா காந்தி இணைந்து பாடி இருந்தார்கள். கடந்த ஜூலை மாதம் யு டியூப்பில் வெளியிடப்பட்ட இந்த பாடல் 100 மில்லியின் பார்வையாளர்களை எட்டியுள்ளது.
இதுகுறித்து தனது டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள சிவகார்த்தியேன். இந்த பாடலுக்கு ஆடி ரசிகர்கள் வெளியிட்டிருந்த வீடியோவை தொகுத்து வெளியிட்டு "அனிருத் அடுத்த செஞ்சுரி அடித்து விட்டார் "என்று குறிப்பிட்டிருக்கிறார் .