2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் |
தியேட்டர் அதிபர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே நடந்து வரும் பனிப்போரின் காரணமாக திரைப்படங்கள், மினிமம் கியாரண்டி கொண்ட ஒடிடி தளத்திலேயே அதிகமாக வெளியாக இருக்கிறது.
சூர்யாவின் சூரரைப்போற்று, விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள். கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமியின் டேனி உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன.
அடுத்து தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம், ஆர்யா நடித்துள்ள டெடி உள்ளிட்ட பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள மண்டேலா படமும் ஓ.டி.டி.யிலும், தொலைக்காட்சியிலும் வெளிவர இருக்கிறது.
மண்டேலா படத்தை மடோன் அஷ்வின் இயக்கி உள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் ஏற்கனவே எடுத்த ஏலே படமும் தியேட்டர் அதிபர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக டிவியில் நேரடியாக ஒளிபரப்பானது. விரைவில் ஓ.டி.டி.யிலும் வருகிறது. தற்போது மண்டேலா படத்தையும் அதே பாணியில் வெளியிடுகிறார். யோகிபாபு கதாநாயகனாக நடித்த காக்டெயில் படம் ஏற்கனவே ஓ.டி.டி.யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.