பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளிலும் பிஸியாக நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். இத்தாலி நாட்டைச் சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு காதலித்தார். சென்னைக்கு அவரை அழைத்து வந்து அப்பா கமல்ஹாசனிடம் அறிமுகப்படுத்தி, ஒரு திருமண நிகழ்விலும் மூவரும் ஒன்றாகக் கூட கலந்து கொண்டார்கள். அதன்பின் கடந்த வருடத்தில் அந்தக் காதலரைப் பிரிந்தார் ஸ்ருதிஹாசன்.
தற்போது சாந்தனு ஹசரிகா என்ற டூடுள் கலைஞர் மற்றும் ஓவியரைக் காதலித்து வருவதாகச் சொல்கிறார்கள். சாந்தனு அவருடைய சமூக வலைத்தளத்தில் ஸ்ருதியுடன் இருக்கும் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். ஆனால், இருவரும் இன்னும் அதிகாரப்பூர்வமாக தங்களது காதலை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் சென்னை வந்த ஸ்ருதிஹாசன், தன் அப்பா கமல்ஹாசனிடம் தனது காதலரை அறிமுகப்படுத்தினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ருதிஹாசன் நடித்து வெளிவந்த 'கிராக்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் அவருக்கு பல புதிய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழில் 'லாபம்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.