புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சீனு ராமசாமி இயக்கத்தில், இளையராஜா - யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'மாமனிதன்'.
இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிவடைந்தது. அதன்பின்பு இதோ வெளியாகிறது, அதோ வெளியாகிறது எனச் சொல்லியே கடந்த வருடம் வரை இழுத்தடித்தார்கள். அடுத்து கொரானோ தாக்கத்தால் கடந்த ஒரு வருடமாக படத்தை வெளியிட முடியவில்லை.
இப்போது ஒரு வழியாக படத்தை வெளியிடும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அது பற்றிய அப்டேட்டை படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி கொடுத்துள்ளார். “மாமனிதன்தலைப்பு ஏற்கனவே தயாரிப்பாளர் திரு,ஜெயசீலன் என்பவரிடம் இருந்தது அதை முறைப்படி திரு,யுவன்சங்கர்ராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றார் ஆகவே மாமனிதன் படத்தின் தலைப்பு எங்கள் படத்திற்கு உறுதியானது.
தலைப்பு பெற்றதால் முதல் பார்வை, பாடல் விரைவில்” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நெப்போலியன், வினிதா மற்றும் பலர் நடித்து 1995ம் ஆண்டில் 'மாமனிதன்' என்ற பெயரில் ஒரு படம் வெளிவந்துள்ளது. இதற்கு முன்பு வெளிவந்த படங்களின் தலைப்பை மீண்டும் பயன்படுத்த விரும்பினால் பழைய தயாரிப்பாளரிடமிருந்து என்ஓசி வாங்க வேண்டும். அதை இப்போதுதான் வாங்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது.