ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

சிவகார்த்திகேயன் அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த மதராஸி படம், செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. ரஜினிகாந்த்தின் கூலி வெளியானபின் மதராஸி பட புரமோஷன்களை ஆரம்பிக்க உள்ளனர். முருகதாஸ், சிவகார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் இது முக்கியமான படம். காரணம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் பெரிய வெற்றி பெற்றது. ரூ.350 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. ஆகவே, இன்னொரு வெற்றிக்கொடுத்து அவர் தன்னை நிரூபிக்க ஆசைப்படுகிறார். முருகதாஸிற்கு பெரிய வெற்றி தேவைப்படுகிறது. ஹிந்தியில் சல்மான்கானை வைத்து அவர் இயக்கிய சிக்கந்தர் படம் தோல்வி. மொத்தமே 160 கோடி வரை மட்டுமே வசூலித்ததாக தகவல். ஆகவே, அவரின் அடுத்த படம் அவர் எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ளது. இரண்டுபேருமே மதராஸியை பெரிதும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். கஜினி, துப்பாக்கி கலந்த கலவை என மதராஸி பற்றி முருகதாஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.