100வது நாளில் அமரன் படம் | மாற்றி அறிவிக்கப்பட்ட மம்முட்டியின் பஷூக்கா ரிலீஸ் தேதி | 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரித்விராஜ் படத்தை இயக்கும் ஜீத்து ஜோசப் | கேரள கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகசைதன்யா | துல்கர் சல்மான் படம் மூலம் மீண்டும் டைரக்சனுக்கு திரும்பும் மின்னல் முரளி ஒளிப்பதிவாளர் | பிளாஷ்பேக் : மூன்றாம் பிறை படத்திற்காக ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? | பிளாஷ்பேக் : ஒரே பிரேமில் 5 சின்னப்பா : 80 வருடங்களுக்கு முன்பே தொழில்நுட்ப சாதனை | எப்படி இருந்த ஷிவானி இப்படி ஆகிட்டாங்களே | ரஞ்சனி சீரியலில் பவித்ரா ஜனனி என்ட்ரியா? | மெளன ராகம் ஜோடி இப்போது ரியல் ஜோடி ஆகிறார்கள் |
முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிவர் சாண்டி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
பெம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஜீவதா கிஷோர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் நம்பிக்கை சந்துரு இயக்கும் 3.33 படத்தில் சாண்டி கதாநாயகனாக நடிக்கிறார். திகிலூட்டும் ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் ஆமானுஷ்ய ஆய்வாளராக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் நம்பிக்கை சந்த்ரு கூறியதாவது: இயக்குனர் கவுதம் மேனன் வரவு எங்கள் 3.33 படத்தின் தரத்தை மேலும் அதிகரித்துள்ளது. அவருடன் பணியாற்றியது மறக்கமுடியாத நிகழ்வு என்றார்.