வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் |
பாக்யம் மூவீஸ் சார்பில் ராமானுஜம் தயாரித்துள்ள படம் சினிமா கனவுகள். பகவதி பாலா, மீரா, ஸ்ரீஜா சரவணன், கிங்காங், வாசு விக்ரம், டாக்டர்.சீனிவாசன், அம்பானி சங்கர், சாவித்திரி, கண்ணன், ஸ்ரீலட்சுமி, ரஞ்சன், கலைவாணி உள்பட பலர் நடித்துள்ளனர். ஆகாஷ் ஸ்ரீதர் இசை அமைக்கிறார். உதய்சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். காதல் பதிவு, நந்திவரம் படங்களை இயக்கிய பிரபு ராமானுஜம் தயாரித்து, இயக்கி உள்ளார்.
படம் பற்றி அவர் கூறியதாவது : சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவில் பல வருடங்களாக முயற்சித்துக் கொண்டிருக்கும் நாயகன் சரவணனுக்கு தயாரிப்பாளர் ஒருவர் கிடைக்கிறார். உடனடியாக படப்பிடிப்பும் துவங்குகிறது. படமும் திரைக்கு வர ரெடியானது. இந்த நிலையில் தயாரிப்பாளரின் மகள் மீரா, இயக்குனர் சரவணனிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறாள். அந்த காதலை ஏற்க சரவணன் மறுக்கிறான். அதன் பிறகு அவள் செய்த காரியத்தை பார்த்து சரவணன் அதிர்ச்சி அடைகிறான். அதன் பிறகு என்ன நடந்தது? அவன் இயக்கிய படம் வெளிவந்ததா? சரவணன் என்ன ஆனான்? இப்படி பல முடிச்சுகளுக்கு சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து படத்தை இயக்கி உள்ளேன். என்றார்.