காதலர் தினத்தில் காஷ்மீரில் ஹோட்டல் திறக்கும் கங்கனா | உலக அளவில் முதலிடம் பிடித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா- 2! | டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்! | தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் |
18வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் கடந்த 18.02.2021அன்று சென்னை PVR சத்யம் திரையரங்கில் கோலாகலமாக தொடங்கியது. உலக நாடுகளில் இருந்து, பல மொழிகளில், பல திரைப்படங்கள் திரையிடப்பட்ட போதும், இந்தியாவில் இந்தியன் பனோரமா பிரிவில் இருந்து மொத்தம் 17 படங்கள் தேர்வாகி இருந்தது. அதில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட "அமலா" திரைப்படமும் தேர்வாகி இருந்தது.
இயக்குனர் நிஷாத் இப்ராஹிம் இயக்கத்தில், நடிகர்களான ஸ்ரீகாந்த், "ஆட்டோ சங்கர் வெப் சீரிஸ்" புகழ் அப்பாணி சரத், அனார்கலி மரிக்கர், இவர்களுடன் குழந்தை நட்சத்திரங்களான வைஷ்ணவ், ஆன்மரியா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தை முஷினா நிஷாத் இப்ராஹிம் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் லிஜின் பொம்மினோ இசையில் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த அமலா திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கும் படக்குழுவினருக்கும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தப் படத்தில், ஒரு இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் ஒரு பூங்காவில் இறந்து கிடக்க, அது கொலையா..? தற்கொலையா..? என்று போலீசார் குழம்பியிருக்கும் சமயத்தில் உயர் அதிகாரியான நடிகர் ஸ்ரீகாந்த் இதை கொலைதான் என்று அடித்து சொல்லி, துப்பு துலங்குகிறார். அதே நேரத்தில் நகரத்தில் அடுத்தும் ஒரு இளம் பெண் இறக்கும் தருவாயில் இருக்கிறார். அவரைக் காப்பாற்றிய ஸ்ரீகாந்த், அவளிடம் விசாரிக்க , அவரோ "அமலா" என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் சொல்லி இறந்து விடுகிறார். அதன்பின் நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதி கதை.