தெலுங்கு கற்கும் விஜய் சேதுபதி | கொரோனா சூழலிலும் 'கிளாமர்' போட்டோக்களைப் பதிவிடும் நடிகைகள் | அடுத்தடுத்து புதிய படங்களில் தனுஷ் | ரேஷ்மாவின் புதிய தொடர் அபி டெய்லர்ஸ் | 3வது குழந்தை பெற்றால் சிறை: கங்கனா அதிரடி | சினிமாவில் பிசியாகும் சிவாங்கி | சிறப்பு அனுமதியுடன் இரவு ஊரடங்கிலும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு ? | மீண்டும் இணையும் கர்ணன் கூட்டணி | ஹிந்தி இசையமைப்பாளர் ஷ்ராவன் கொரானோவால் மரணம் | பிரசாந்த் படத்தில் இணைந்த கார்த்திக் |
சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான், ,தமிழ் தேசிய புலிகள் என்ற புதிய கட்சியை துவக்கி உள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில், திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட மன்சூர் அலிகான், தோல்வி அடைந்தார். இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் தாம் போட்டியிட உள்ளதாக மன்சூர் அலிகான் வீடியோ பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், சட்டசபை தேர்தலில் சீமான் எனக்கு தொகுதி ஒதுக்கவில்லை. இது வருத்தத்தை தருகிறது. தமிழ்த் தேசிய புலிகள் கட்சி என்ற தனிக்கட்சியை தொடங்கி உள்ளேன் என கூறினார். சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணமாகவே நாம் தமிழர் கட்சியில் இருந்து மன்சூர் அலிகான் விலகி உள்ளதாக கூறப்படுகிறது.