"மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் | விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் என அவதூறு: மன்சூரலிகான் மீது போலீசில் புகார் | வெற்றி நடிக்கும் ரோட் மிஸ்ட்ரி படம் | சித்திரம் பேசுதடி: புதிய தொடர் |
கொரோனா ஊரடங்கு முடிந்து 100 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் படத்திற்கு பிறகு மக்கள் தியேட்டருக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். சில பெரிய படங்கள் தியேட்டருக்கு வந்தாலும் பல படங்கள் ஓடிடி தளத்திற்கு செல்கின்றன.
இதற்கிடையில் விபிஎப் நிறுவனங்கள் அறிவித்துள்ள கட்டண சலுகை வருகிற மார்ச் 31ந் தேதியுடன் முடிகிறது. விபிஎப் கட்டணத்தை கட்ட மாட்டோம் என்பதில் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள். 30 நாட்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியிடுவோம் என்ற கடிதம் கொடுத்தால் மட்டுமே, திரையரங்குகள் ஒதுக்குவோம் என்பதில் தியேட்டர் உறுதியுடன் இருக்கிறார்கள். இதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.
இந்த பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர்களும், தியேட்டர் அதிபர்களும் பல சுற்று பேச்சு நடத்தியும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் வருகிற மார்ச் 1ந் தேதி முதல் தியேட்டர்களை மூட தியேட்டர் அதிபர்கள் சங்கம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு விரைவில் கூட இருக்கிறது.ூ.