துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், அனைவருக்குமே ஒரு வருடம் தான் லாக்டவுன். ஆனால் நான் பத்து வருடங்களாக படவாய்ப்புகள் இல்லாமல் லாக்டவுனில் இருக்கிறேன் என்று சொல்லி கண்கலங்கியிருந்தார் வடிவேலு. இந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து தற்போது வடிவேலு இரண்டு புதிய படங்களில் கமிட்டாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, மெட்டிஒலி சீரியல் மூலம் புகழ் பெற்ற திருமுருகன் அதையடுத்து எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு போன்ற படங்களை இயக்கினார். அந்த இரண்டு படங்களிலுமே வடி வேலுவும் நடித்திருந்தார். இந்த நிலையில் அடுத்த படியாக சத்யஜோதி பிலிம்சுக்காக தான் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு-ஆர்.ஜே.பாலாஜி இருவரையும் இணைத்து இயக்கப்போ¡கிறாராம் திரு முருகன்.
அதையடுத்து சூர்யா நடிக்கும் புதிய படத்திலும் வடிவேலு நடிக்கயிருப்பதாக இன்னொரு செய்தியும் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு கடைசியாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ஆதவன் படத்தில் வடிவேலு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.