துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார் ஷங்கர். கடைசியாக படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்திற்கு பின் படப்பிடிப்பு துவங்கவில்லை. மேலும் கமல் தற்போது அரசியலில் பிஸியாகி விட்டதால் இதன் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது. இருப்பினும் 60 சதவீதம் இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் மீதி படப்பிடிப்பை முடித்த பின்னர் தான் அடுத்தப்பட வேலையில் ஷங்கர் இறங்க உள்ளார். இதற்கிடையே ராம்சரண் நடிப்பில் தமிழ்-தெலுங்கில் ஒரு படத்தை இயக்கும் ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கி விட்டார் ஷங்கர். இந்தப்படம் முழுமையாக முடிந்த பின்னர் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் ஒரு படத்தை ஷங்கர் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.