தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட பத்துக்கும் குறைவான கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து பஹத் பாசில் தயாரித்து நடித்த 'சீ யூ சூன்' என்கிற படம் வெளியானது. கொரோனா தாக்கம் நிலவிய நேரத்திலேயே எடுக்கப்பட்டது என்பதால், அந்தப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த நிலையில் தற்போது பஹத் பாசில், தர்ஷனா ராஜேந்திரன், காமெடி நடிகர் சௌபின் சாஹிர் என மொத்தம் மூன்று கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு இருள் என்கிற படம் உருவாகியுள்ளது.
இப்போது நிலைமை ஓரளவு சரியாகி விட்டதால், இந்தப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தப்படமும் ஓடிடி தளத்தில் தான் வெளியாக இருக்கிறதாம். நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் .லாபகரமான தொகைக்கு ஒப்பந்தம் போடப்பட்டு விட்டதாம். ஆனாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த விஷயத்தை அறிவிக்கவில்லை.
காரணம் இந்தப்படத்தை பஹத் பாசில் மற்றும் மம்முட்டியின் ஆதரவு தயாரிப்பாளரான ஆன்டோ ஜோசப் ஆகியோர் தான் இணைந்து தயாரித்துள்ளார்கள். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம்-2வை தியேட்டர்களில் வெளியிடாமல் ஓடிடிக்கு கொடுத்ததற்காக அவர் மீது வருத்தத்தில் இருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள். அதனால் மெதுவாக இந்த விஷயத்தை வெளியே அறிவிக்கலாம் என மௌனம் காக்கிறது பஹத் பாசில் தரப்பு.