மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை? | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |
தெலுங்கில் சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் அனசுயா பரத்வாஜ். ரங்கஸ்தலம், யாத்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து ஓரளவு பிரபலமான இவர், தற்போது சிரஞ்சீவியின் ஆச்சார்யா, அல்லு அர்ஜுனின் புஷ்பா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் மம்முட்டி நடிக்கும் 'பீஷ்ம பர்வம்' படத்தில் நடிப்பதன் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறார் அனசுயா பரத்வாஜ். ஏற்கனவே தெலுங்கில் மம்முட்டி கதாநாயகனாக நடித்த யாத்ரா படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார் அனசுயா.
மம்முட்டியை வைத்து 'பிக் பி' என்கிற கேங்ஸ்டர் படத்தை இயக்கிய இயக்குனர் அமல் நீரத் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மம்முட்டியுடன் இணையும் படம் இது. வரும் மார்ச் மாதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.