ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' |

அஜித் பட அறிவிப்பென்றாலே திருவிழாவாகக் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள் அவரது ரசிகர்கள். சமீபத்தில் அப்படித்தான் கண்ணில் பட்ட பிரபலங்களிடம் எல்லாம் வலிமை பட அப்டேட் கேட்டு ரசிகர்கள் நச்சரிக்க, ஒரு கட்டத்தில் அறிக்கை வாயிலாக அஜித்தே அவர்களைக் கண்டிக்கும் நிலைமை ஏற்பட்டது.
இந்நிலையில் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் நிலையில் அவரது பட ரிலீஸ் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அஜித்தின் திரையுலகப் பயணத்தில் பெரும் திருப்புமுனையைத் தந்த படங்களில் ஒன்றான பில்லா மீண்டும் ரிலீசாக இருக்கிறது. அடுத்த மாதம் (மார்ச் 12-ந் தேதி) தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் பில்லாவை ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்து உள்ளனராம்.
கடந்த 2007ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இப்படம் மாபெரும் ஹிட் ஆனது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா, நமீதா ஆகியோர் நடித்திருந்தனர். ரஜினியின் பில்லா பட ரீமேக் தான் இந்தப்படம் என்றாலும், மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.