Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் திரிஷ்யம் | தெகிடி இரண்டாம் பாகம் : அசோக் செல்வன் வெளியிட்ட தகவல் | மறக்க முடியாத தருணங்களுக்கு நன்றி : கொட்டுக்காளி பற்றி சிவகார்த்திகேயன் | ஜி.வி.பிரகாஷ் - ஷிவானி நடிக்கும் புதிய படம் | மாற்றுத்திறனாளி பட்டதாரிக்கு மூன்று சக்கர வாகனம் வாங்கி தந்த பாலா | மீண்டும் அஜர்பைஜானுக்கு பறக்கும் விடாமுயற்சி படக்குழு | இரண்டு முன்னனி தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சிம்பு | தாய்மையை அறிவித்த தீபிகா படுகோனே | விஜய் 69 : உத்தேச இயக்குனர் பேச்சில் ஆர்ஜே பாலாஜி ? | ரசிகரின் வேண்டுகோளை ஏற்று கேரளா வரச் சொன்ன ‛மின்னல் முரளி' இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

கருணையும், கண்டிப்பும் கலந்த கலவை ஜெ., - மனம் திறக்கிறார் வெண்ணிற ஆடை நிர்மலா

20 பிப், 2021 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Vennira-aadai-nirmala-shares-about-Jayalalitha

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழ் திரையுலகில் அறிமுகமான வெண்ணிற ஆடை படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர், நிர்மலா. அந்த படத்தின் வெற்றியால், நிர்மலாவின் பெயரின் முன், வெண்ணிற ஆடை என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. முதல் படத்திலேயே, ஜெ.,வுக்கும், நிர்மலாவுக்கும் நடிப்பில் போட்டி என்றால், பின்னாளில், அரசியல் களத்திலும் அது தொடர்ந்தது.

எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், தமிழக அரசியலில் ஏற்பட்ட குழப்பத்தால், அ.தி.மு.க., பிளவுபட்டது. ஜானகி அணி, ஜெ., அணி என பிரிந்த போது, 1989ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ஜானகி அணி சார்பில், ஜெ.,வை எதிர்த்து களம் கண்டார் நிர்மலா. அந்த தேர்தலில், ஜெ., மகத்தான வெற்றி பெற்றார். அ.தி.மு.க.,வின் தலைமை பொறுப்பும், ஜெ., வசம் வந்தது. சில காலங்களுக்குப் பின், ஜெ.,வின் அழைப்பை ஏற்று, அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைந்த நிர்மலா, அவரின் அபிமானத்தை பெற்ற, நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக வலம் வந்தார்.ஜெயலலிதாவுடனான நினைவலைகளை, நம்முடன் பகிர்ந்த நிர்மலா கூறியதாவது: வெண்ணிற ஆடை தான், எனக்கும், ஜெயலலிதாவுக்கும் அறிமுக திரைப்படம். அதன் பின், ரகசிய போலீஸ் 115, தங்க கோபுரம் போன்ற படங்களிலும், சில தெலுங்கு படங்களிலும், சேர்ந்து நடித்துள்ளோம். நடிகையாக இருந்தபோதே, ஜெ., மிகவும் தைரியசாலி. தவறு என மனதில் பட்டால், அதை உடனே சுட்டிக்காட்டுவார்; யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பார். அந்த தைரியம் தான், இரும்பு பெண்மணி என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்தது.அவரின் இறுதி காலம் வரை, இரும்பு பெண்மணியாகவே வாழ்ந்தும் காட்டினார்.

எம்.ஜி.ஆர்., இறந்தபோது, அவரை எதிர்த்து போட்டியிட்டவள் நான். அதன் பின், கட்சியில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் அ.தி.மு.க.,விலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தேன். இத்தனைக்கும் பிறகு, என் மீது பாசம் காட்டிய ஜெ., நீங்கள் தாயகம் திரும்ப வேண்டும் என, அன்புடன் அழைப்பு விடுத்தார். அவர் கூறிய வார்த்தைகள், என்னை கண்கலங்க வைத்தன. அதனால், மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்தேன்.

எம்.ஜி.ஆர்., எனக்கு வழங்கிய, நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை, ஜெ.,வும் எனக்கு வழங்கினார். கட்சியில் எத்தனை நட்சத்திர பேச்சாளர்கள் இருந்தாலும், எனக்கு தனி முக்கியத்துவம் அளித்தார். அவரின் இதுபோன்ற செயல்கள், என்னை மிகவும் நெகிழ வைத்தன. ஒருமுறை, தேர்தல் பிரசாரத்திற்காக, தஞ்சாவூர் போயிருந்தேன். அப்போது, அங்கிருந்தவர்கள் என்னை விழுந்து விழுந்து உபசரித்தனர். 10 நிமிடத்திற்கு ஒருமுறை, உங்களுக்கு ஏதாவது வேணுமா? என கேட்டபடி இருந்தனர். அவர்களின் அதீத உபசரிப்பு, ஒரு கட்டத்தில் எனக்கு எரிச்சலுாட்டியது. அவர்களை கடிந்து கொண்ட நான், அளவுக்கு அதிகமாக கவனித்து, ஏனப்பா இப்படி தொந்தரவு செய்கிறீர்கள்? என்றேன். அப்போது அங்கிருந்தவர்கள், அம்மாவின் உத்தரவு அது என்றனர். நான் நெகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றேன்.ஜெ.,, அடிப்படையில் மிகவும் நல்லவர்; பாசமானவர். அதேசமயம், தவறு என்று தெரிந்தால், கருணையே காட்டாமல் தண்டனை கொடுக்கும் இரும்பு பெண்மணி. மொத்தத்தில், கருணையும், கண்டிப்பும் கலந்த கலவை என்றே கூறலாம். நடிகையாக இருந்த காலத்தில், ஜெ., அரசியல் பற்றி சிந்தித்ததும் கிடையாது. சராசரி குடும்ப பெண்மணிகளைப் போல் வாழவே விரும்பினார். காலத்தின் கட்டாயத்தால் அரசியலுக்கு வந்தவர், காலத்தை வென்று சாதனை படைத்தார்.

இளம் தலைமுறை பெண்கள், அவரைப் பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் விரக்தி அடையாமல் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். சோதனைகள் வரும் நேரத்தில் ஜெ.,வின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் எண்ணிப் பார்த்தால் மனதில் தானாக அச்சம் அகலும்; நம்பிக்கை பிறக்கும். இது இக்கால பெண்களுக்கு நான் சொல்லும் அட்வைஸ் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். சோதனைகள் பல கடந்து, சாதனை படைத்த, இரும்பு பெண்மணி ஜெ.,க்கு நிகர், ஜெ., மட்டும் தான்! என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'மாஸ்டர்' ஒரு மைல்கல்! - சிலிர்க்கிறார் மகேந்திரன்'மாஸ்டர்' ஒரு மைல்கல்! - ... நான் கிளாமர் பொண்ணு இல்லை: நடிகை பிரியா பவானி சங்கர் நான் கிளாமர் பொண்ணு இல்லை: நடிகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Na Na
  • நா நா
  • நடிகர் : சசிகுமார் ,
  • இயக்குனர் :NV நிர்மல்குமார்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in