படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார் | சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர் | தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன் | நித்யா மேனனுக்கு விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி | சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி | இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி | மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா | மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர் | இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர் | தடைகளை தாண்டி 'துருவ நட்சத்திரம்' வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை |
மின்மினிகளாக மின்னும் கண்மணிகள்... சிந்தாமல் சிந்தும் சிரிப்பு சிதறல்கள் என மேயாத மான் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி நம் மனதைகொள்ளையடித்து, களத்தில் சந்திப்போம்ல் கலக்கிய நடிகை பிரியா பவானி சங்கர் மனம் திறக்கிறார்...
* களத்தில் சந்திப்போம் படம் பற்றி
ஜீவா, அருள்நிதி என இரண்டு ஹீரோ. நான் அருள்நிதிக்கு ஜோடி. மஞ்சுமா தான் ஹீரோயின். நான் அருள்நிதியுடன் கொஞ்சம் வந்து போறேன். படம் பார்க்கும் பசங்க நட்பை நினைச்சு பார்ப்பாங்க. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சூப்பர்.
* எப்படி ஒரு கதையில் நடிக்க முடிவு எடுப்பீர்கள்
படத்தின் தயாரிப்பாளர் யாருன்னு பார்ப்பேன். இன்றைய சூழலில் பெரிய தயாரிப்பாளர்களே அதிக படம் கொடுக்குறது இல்லை. அதனால் தயாரிப்பு அப்புறம்; கதை நல்லா இருக்கான்னு பார்த்த தான் முடிவு எடுப்பேன்.
![]() |
என்னை டிவியில் பார்த்த பார்வையாளர்கள் இப்போ சினிமாவில் பார்க்கிறார்கள். ரசிகர்கள் ஈஸியா கிடைக்க மாட்டாங்க. டிவி வாய்ப்பை சரியா பயன்படுத்துறேன்னு நம்புறேன், டிவியில் இருந்து வந்து 2 படம் நடிச்சுட்டு போயிட்டாங்கனு தவறான உதாரணமாக விரும்பலை.
![]() |