பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மலையாளத்தில் 2014ல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, வசூலை வாரிக்குவித்து, சீன மொழி உட்பட 6 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது த்ரிஷியம். மோகன்லால், மீனா நடித்திருந்தனர். தமிழில் கமல், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் வெளியானது.
ஆறாண்டுகளுக்கு பிறகு த்ரிஷியம் 2 உருவாகி கடந்த வாரம் அமேசான் பிரைம் ஓ.டி.டி., தளத்தில் வெளியாகி உள்ளது. உலகில் 225 நாடுகளில் உள்ள மலையாளிகள் இந்த திரைப்படத்தை ஒரே நேரத்தில் பார்த்துள்ளனர். முதல் படத்தை விட அதன் இரண்டாம் பாகம் இன்னும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு வாரத்தில் அதிகமான தமிழ் ரசிகர்களும் த்ரிஷியம் 2 பார்த்துள்ளனர். இரண்டாம் பாகமும் அதற்குள் தெலுங்கில் தயாராக பணிகள் துவங்கி விட்டன.இப்படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் அளித்த பேட்டி...
* த்ரிஷியம் படம் தயாராகும் போதே 2ம் பாகம் உருவாக்கும் என்ற எண்ணம் இருந்ததா
நிச்சயமாக இல்லை. அதோடு கதை நிறைவு பெற்றுவிட்டதாகவே நினைத்திருந்தேன். ஆனால் 2ம் பாகம் தயார் செய்ய கதையில் வாய்ப்புள்ளதா என தயாரிப்பாளர் ஆன்டனி பெரும்பாவூர் கேட்டுக் கொண்டார். அதற்குள் சமூக ஊடகங்களில் எல்லாம் 2ம் பாக கதை இது தான் என்று வெளியிட்டுக் கொண்டிருந்தனர். சரி, நாமே சிந்திப்போம் என்று கதையை உருவாக்க துவங்கினேன். ஆறாண்டுகள் பல மாற்றங்களுடன் கதை மனதில் ஓடியது. கடைசியில் கொரோனா காலத்தில் ஒரே மாத்தில் ஸ்கிரிப்ட் எழுதி, படப்பிடிப்பும் முடித்து விட்டேன்.
*ஜோர்ஜ் குட்டி (மோகன்லால்) போலீஸ் ஸ்டேஷனில் நிற்பதை பார்த்த ஒரு சாட்சியை 2ம் பாகத்தில் உருவாக்கியிருக்கிறீர்கள். முதல் பாகம் எழுதும் போது அப்படி ஒரு கற்பனை இருந்ததா?
இல்லை. இரண்டாம் பாகம் துவங்க இந்த கற்பனை தான் காரணமாயிற்று.
![]() |
விருப்பம் உள்ளது. வாய்ப்பு வரட்டும். மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ராம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் வெளியாகும். அது ஒரு மாஸ் படமாக இருக்கும்.
![]() |