அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
எம்.ஜி.ஆர்., கழகம் என்ற கட்சியின் நிறுவனரும், அ.தி.மு.க., மாஜி அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஏப்.,9). அதையொட்டி அவரது சத்யா மூவிஸ் நிறுவனம், ஆர்.எம். வீரப்பன் பற்றிய நினைவுகளை குறிப்பிடும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் அவரை பற்றி பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். ஆர்.எம்.வீரப்பன் குறித்து பேசுவது ரொம்ப மகிழ்ச்சி. 1995ல் வெளியான பாட்ஷா பட வெற்றி விழாவில் அப்போதைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் முன்னிலையில், வெடிகுண்டு கலாசாரம் குறித்து பேசியதால் அவர் பதவி போனது. நான் ஜெயலலிதாவுக்கு எதிராக பேச இந்த காரணம் முக்கியமானது. இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.
'பாட்ஷா' 100வது நாள் விழாவில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசினேன். அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் மேடையில் இருக்கும் போது பேசியிருக்க கூடாது. அப்போ எனக்கு தெளிவு இல்லை. பேசிட்டேன். அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த எம்.ஆர்.வீரப்பனை, முதல்வராக இருந்த ஜெயலலிதா, அமைச்சர் மேடையில் இருக்கும் போது ரஜினி, அரசுக்கு எதிராக பேசினால் எப்படி சும்மா இருக்க முடியும் என்று சொல்லி வீரப்பனை பதவியில் இருந்து தூக்கிவிட்டார்.
அது தெரிந்த உடனே எனக்கு ஆடிப்போச்சு. என்னால் தான் இப்படி ஆனது என்று நினைத்து இரவு முழுவதும் தூக்கம் வரலவில்லை. போன் செய்தால் யாரும் எடுக்கவில்லை. மறுநாள் காலையில் நேரில் போய் 'ஸாரி சார்; என்னால தான் ஆனது' என்று சொன்னேன். அவர் எதுவுமே நடக்காத மாதிரி.. 'அதெல்லாம் விடுங்க... அதைப்பற்றி கவலைப்படாதீங்க... மனசுல வெச்சுக்காதீங்க... நீங்க விடுங்க. சந்தோஷமா இருங்க... எங்க ஷுட்டிங்' என்று சாதாரணமாக கேட்டார்.
எனக்கு அந்த தழும்பு எப்போதும் போகாது. ஏனென்றால் நான் தான் கடைசியாக பேசினது. நான் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசுவதற்கு சில காரணங்கள் இருந்தாலும் கூட இந்த காரணம் முக்கியமானது. அதன்பிறகு சில நாட்களுக்கு பிறகு ஜெயலலிதாவிடம் இதுப்பற்றி பேசுவதாக சொன்னபோதும், 'அதெல்லாம் வேண்டாம், அவர் முடிவெடுத்தால் மாற்றமாட்டார். நீங்கள் பேசி உங்களுடைய மரியாதையையும் இழக்க வேண்டாம்; நீங்கள் சொல்லி நான் அங்கு சேர வேண்டிய அவசியமும் இல்லை; இதை விட்டுவிடுங்கள்' என்றார். இவ்வாறு ரஜினி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.