பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! |
ஆரம்ப காலங்களில் விஜயகாந்த் இலங்கையில் போராட்டம் நடத்தி வந்த விடுதலைபுலிகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தனது மூத்த மகனுக்கு பிரபாகரன் என்றே பெயர் வைத்தார். அவரது படங்களில் விடுதலை புலிகளை ஆதரித்து வசனம் பேசினார்.
இந்த நிலையில் அவர் நடித்த படம் 'இது எங்க பூமி'. 1984ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் விஜயகாந்தும், பிருந்தா என்ற புதுமுகமும் நடித்தனர். இந்த படத்திற்கு பிறகு பிருந்தா என்ன ஆனார் என்றே தெரியவில்லை. ஜெய்சங்கர், ஜெயமாலினி, நிழல்கள் ரவி, வினு சக்ரவர்த்தி, சசிகலா உள்பட பலர் நடித்திருந்தார்கள். அதிரடி படங்களுக்கு பெயர் பெற்ற கர்ணன் இந்த படத்தை இயக்கினார், கலைத்தோட்டம் கிரியேஷன் சார்பில் எம்.சூர்ய நாராயணன் தயாரித்தார். சங்கர்&- கணேஷ் இசை அமைத்தனர்.
அநீதியை எதிர்த்து போராடும் ஒரு இளைஞனின் கதை. படத்திற்கு முதலில் 'விடுதலைபுலிகள்' என்றே தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இதற்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இலங்கை தூதரகம் இந்திய தணிக்கை குழுவிற்கு படத்தை தலைப்பை மாற்ற வேண்டுகோள் விடுத்தது. அதோடு படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை ராமகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து படத்தின் தலைப்பு 'இது எங்க பூமி' என்று வைக்கப்பட்டது.