அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
ஒரு காலத்தில் பிசியான நடிகையாக இருந்த ரம்பா, பின்னர் கனடா தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலானர். திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. 3 குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார். இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அதன் முன்னோட்டமாக விஜய் டி.வி-யில் 'ஜோடி ஆர் யூ ரெடி' ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராகக் களமிறங்கி இருக்கிறார்.
இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது: பிசியான நேரத்தில்தான் திருமணம் செய்து கொண்டேன். காரணம் குழந்தை, கணவர் என்ற குடும்ப வாழ்க்கை எனக்கு பிடித்திருந்தது. கனடாவிற்கு சென்றாலும் அங்கு சும்மா இருக்கவில்லை. கணவரின் தொழிலுக்கு உதவியாக இருந்தேன், கிச்சன் டிசைனிங் கோர்ஸ் படித்தேன். எனக்கு 5 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ஆசை இருந்தது. ஆனால் பிறந்த 3 குழந்தைகளும் சிசேரியன் என்பதால் இனி வேண்டாம் என்று டாக்டர்கள் தான் தடுத்து விட்டார்கள்.
நீ விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று கணவர் சுதந்திரம் கொடுத்திருந்தார். அதற்கான நேரம் இப்போது அமைந்திருக்கிறது. குடும்பம் கனடாவில் இருக்கிறது. நான் நடிக்க வந்திருக்கிறேன். தினமும் கணவர் குழந்தைகளோடு வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கிறேன். முன்பே நிறைய வாய்ப்புகள் வந்தது, ஆனாலும் குடும்ப பொறுப்புகள் அதிகமாக இருந்ததால் நடிக்கவில்லை. இப்போது கணவர் 'நீ நடிக்க செல் குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றதால் நடிக்க வந்தேன்.
எங்களை ஒற்றுமையான தம்பதிளாக மற்றவர்கள் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் எங்களுக்குள்ளேயும் சண்டைகள் வந்திருக்கிறது. பிரிவை நோக்கி யோசிக்க வைத்திருக்கிறது. ஆனாலும், சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்ததால்தான், எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை வருடங்களாக வெற்றிகரகமா சென்று கொண்டிருக்கிறது. பிரச்னை வந்தபோது, தூக்கிப் போட்டுட்டு நான் நினைச்சிருந்தா மறுபடி நடிக்கப் போயிருக்கலாம். ஆனால் குடும்பமும் உறவுகளும் தானே நிரந்தரம். என்கிறார் ரம்பா.