தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? | ரஜினி, கமல் படத்தின் ரிலீஸ் தேதியை குறிவைத்த படக்குழு! | 'தனுஷ் 56' படத்தில் 'உறியடி' விஜய்குமார்? | 'சிக்மா' படத்தை நம்பும் லைகா நிறுவனம்! | ரஜினி 173வது படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட பிரபலம்! | தனுஷ் 55வது படத்தில் தெலுங்கு நடிகர்! |

ஆந்திராவை சேர்ந்த யேடி விஜயலட்சுமி, 'ரம்பா' என்ற பெயருடன் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடித்த அவர் 1983ம் ஆண்டில் 'உழவன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்தார். இந்த படத்தில் தொடை காட்டி நடித்ததால் தொடை அழகி என்று வர்ணிக்கப்பட்டார். அதன் பிறகு தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
2010ம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாபன் என்ற தொழிலதிபரை மணந்து கொண்டு செட்டிலானார். தற்போது அவர் 3 குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். இடையில் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். குழந்தைகள் வளர்ந்து விட்டதால் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க விருப்பம் கொண்டுள்ளார்.
இதற்காக தனி போட்டோஷூட் நடத்தி உள்ள ரம்பா புதிய கால்ஷீட் மானேஜரையும் நியமித்து வாய்ப்பு தேடத் தொடங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது "சினிமா எப்போதுமே எனது முதல் காதல், மீண்டும் வந்து ஒரு நடிகையாக எனக்கு சவால் விடும் பாத்திரங்களை ஏற்று நடிக்க இதுதான் சரியான நேரம் என்று உணர்கிறேன். புதிய பரிமாணங்களை ஆராய்ந்து பார்வையாளர்களுடன் அர்த்தமுள்ள விதத்தில் என்னை இணைக்க அனுமதிக்கும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன்" என்கிறார் ரம்பா.