டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

அறிவழகன் இயக்கத்தில், ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா மற்றும் பலர் நடிப்பில் உருவான 'சப்தம்' படம் நேற்று வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் இப்படம் வெளியானது.
சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையால் வந்த சிக்கலால் இப்படம் நேற்று காலை ரிலீஸ் என சொல்லப்பட்டது. ஆனால், அந்தக் காரணத்தை விடவும் முக்கியமான காரணம் இருந்துள்ளது. இப்படத்தைத் தயாரிப்பதற்காக பைனான்சியரிடம் வாங்கிய தொகையில் 9 கோடி ரூபாயை தயாரிப்பாளர் நேற்று வரை திருப்பித் தராமல் இருந்திருக்கிறார். அதனால், அவர் 'என்ஓசி' தராமல் நிறுத்திவிட்டார்.
மற்ற மாநில வினியோகஸ்தர்கள் ஒரு தொகையைக் கொடுத்து படத்தை வெளியிட்டுவிட்டார்கள். ஆனால், தமிழகத்தில் வெளியிட அதற்குரிய தொகையைத் தயாரிப்பாளரால் திரட்ட முடியவில்லையாம். கடைசியில் நண்பர்கள், படத்தின் நாயகன் ஆதி, இயக்குனர் அறிவழகன் ஆகியோர் முன் வந்து உதவி செய்துள்ளனர்.
நேற்று மதியக் காட்சிக்கு மேல் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், அனைத்து டாகுமென்ட் வேலைகளும் முடிய இரவு ஆகியுள்ளது. அதன்பின் பைனான்சியர் 'என்ஓசி' கொடுத்துள்ளார். அதனால், இன்று காலை முதல் தான் படம் தமிழகத்தில் வெளியானது.
கடைசி நிமிடத்தில் தயாரிப்பாளர்கள் செய்யும் இப்படியான சிக்கலால், படத்தை வாங்கியவர்களும், படத்திற்காக முன்பதிவு செய்த ரசிகர்களும் ஏமாந்து போகிறார்கள். முன்கூட்டியே அனைத்து பைனான்ஸ் பிரச்சனைகளையும் முடிக்காமல் தயாரிப்பாளர்கள் எதற்கு ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டும் என வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் கொந்தளித்துள்ளார்கள்.