பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

அறிமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ள 'சக்ரா' படம் வரும் பிப்ரவரி 19ம் தேதி வெளியாக உள்ளது. விஷால் நடித்து வெளிவந்த 'இரும்புத் திரை' படம்தான் அவருக்குக் கடைசியாக வெற்றியைக் கொடுத்தது. அதன்பின்பு வெளிவந்த மூன்று படங்களான 'சண்டக்கோழி 2, அயோக்யா, ஆக்ஷன்' ஆகிய படங்கள் தோல்வியைத்தான் சந்தித்தது.
அந்தத் தோல்விகளை இந்த வாரம் வெளியாக உள்ள 'சக்ரா' சரிக்கட்டுமா என்பதுதான் கோலிவுட்டில் கேள்வியாக உள்ளது. டிரைலரைப் பார்ப்பதற்கு 'இரும்புத் திரை' பார்ட் 2 போலவே இருக்கிறது. இந்தப் படத்தை எப்படியாவது ஓட வைக்க வேண்டுமென்று விஷாலும் நிறையவே முயற்சிக்கிறார்.
இப்படத்திற்காக தெலுங்கில் கூட பத்திரிகையாளர்களைச் சந்தித்துவிட்டார். ஆனால், தமிழில் இரண்டு தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பை வைத்து பின் திடீரென ரத்து செய்துவிட்டார். எந்த சந்திப்பும் நிகழ்த்தாமல் நேரடியாகவே பட வெளியீட்டை சந்திக்க தயாராகிவிட்டார் போலிருக்கிறது.
இந்தப் படம் வெற்றி பெற்றால்தான் விஷால் தனக்கிருக்கும் சில பல கோடி கடன்களில் கொஞ்சம் கோடிகளையாவது அடைக்க முடியும் என்கிறார்கள்.




