அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
விஜய் தொலைக்காட்சியில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பான தொடர் மவுனராகம். விரைவில் இதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலின் நாயகி என்றால் அது கிருத்திகாதான். அவர் நடித்த சக்தி என்ற கேரக்டர்தான் சீரியலை தாங்கி பிடித்தது. கிருத்திகாவை மையமாக வைத்து இன்னொரு மெகா சீரியலை உருவாக்கி வருகிறது விஜய் டி.வி.
இந்த நிலையில் கிருத்திகாக சினிமாவில் அறிமுகமாகிறார். புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படத்தில் நடித்துள்ளார் கிருத்திகா. இந்த படத்தில் அவர் நீலிமா இசையின் மகளாக நடித்துள்ளார். நீலிமாவும், கிருத்திகாவும் நடித்த அம்மா மகள் உறவைச் சொல்லும் பாடல் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த பாடல் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. தொடர்ந்து கிருத்திகாகவுக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கி உள்ளது.