'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
திருடா திருடி படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் சுப்பிரமணியம் சிவா. அதன்பிறகு பொறி, யோகி, சீடன் படங்களை இயக்கினார். தற்போது விவசாயிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து வெள்ளை யானை என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் சமுத்திரகனி நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை.
சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் வடசென்னை, மற்றும் அசுரன் படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். தற்போது 5க்கும் மேற்பட்ட படங்களில் குறிப்பிடத்தக்க கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
சிட்டிசன் படத்தை இயக்கிய சரவண சக்தி இயக்கும் மீண்டும் என்ற படத்தில் சிபிசிஐடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இது தவிர அம்மா உணவகம் என்ற படத்தில் கண்பார்வையற்ற புரட்சி பாடகராக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் அஸ்வின் கார்த்திக், சசிசரத் இருவரும் நாயகர்களாகவும் ஸ்ரீநிதி, பாத்திமா இருவரும் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். விவேகபாரதி இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.