‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழ் நடிகரான தனுஷ் ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் 'த கிரே மேன்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தில் நடிப்பதற்காக ஹாலிவுட் சென்றுள்ளார் தனுஷ். படப்பிடிப்பு முடியும் வரை மூன்று மாத காலம் அங்கேயே இருப்பார் எனத் தகவல்.
மார்க் கிரீனி எழுதிய 'த கிரே மேன்' என்ற நாவல்தான் திரைப்படமாக உருவாக உள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் தனுஷைப் பற்றி மார்க் கிரீனி வியப்புடன் பேசியுள்ளார்.
“தனுஷை இந்தப் படத்திற்காக ஒப்பந்தம் செய்த போது எனக்கு அவரைப் பற்றித் தெரியாது. அவர் இப்படத்தின் நாயகர்களில் ஒருவராக நடிக்க உள்ளார். எனக்கு டுவிட்டரில் 6000 பாலோயர்கள் தான் இருக்கிறார்கள். அது ஒன்றும் சிறப்பானதல்ல. தனுஷ் என்னை இப்போது டுவிட்டரில் பின்தொடர்கிறார். அவருக்கு 9.7 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார். அது எவ்வளவு சிறப்பானது. அவருடைய வீடியோக்கள் சிலவற்றைப் பார்த்தேன். அவரை 'த கிரே மேன்' படத்தில் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழைக் கடந்து ஹிந்தி, பிரெஞ்ச் படங்களில் நடித்த தனுஷ், 'த கிரே மேன்' படத்தின் மூலம் உலகப் புகழைப் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. அவருடைய 'ரௌடி பேபி' மற்றும் 'ஒய் திஸ் கொவெறி' ஆகிய பாடல்கள் அவரை உலக அளவில் கொண்டு போய் சேர்த்துள்ளது.




