''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
பிரசாத் ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்த பின்னர் சென்னை தி நகரில் சொந்தமாக "இளையராஜா ஸ்டுடியோ" என்ற பெயரில் ஹைடெக் ஸ்டூடியோ கட்டி இசைப்பணிகள் மேற்கொண்டு வருகிறார் இசையமைப்பாளர் இளையராஜா. திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை பதிவு பணிகள் அங்கே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை இளையராஜா தி நகர் வீட்டுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், அவருடன் பல விஷயங்கள் பேசியிருக்கிறார். பின்னர் இளையராஜா சொந்த ஸ்டூடியோ கட்டியிருப்பதை கேள்விப்பட்டு அந்த ஸ்டூடியோவுக்கு இளையராஜாவுடன் சென்று இருக்கிறார் ரஜினிகாந்த். ஸ்டூடியோவை சுற்றி பார்த்து, வியந்து, கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது என பாராட்டி இருக்கிறார். பின்னர் இசைஞானியுடன் நீண்ட நேரம் பல விஷயங்கள் பேசியிருக்கிறார்.
இந்நிலையில் இன்றும் 2வது முறையாக இளையராஜா ஸ்டூடியோவுக்கு மீண்டும் வ ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த். சமீபகாலமாக பொது நிகழ்ச்சி, விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வரும் ரஜினியின் இந்த வருகை பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.