புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் தனது 65வது படத்தில் நடிக்கிறார் விஜய். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா அல்லது பூஜா ஹெக்டே இருவரில் ஒருவர் நடிக்கலாம் என்று கூறப்படும் நிலையில், யோகிபாபு, புகழ் ஆகியோர் இப்படத்தில் ஒப்பந்தமாகியிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவிருக்கும் நிலையில் தனது ஹேர்ஸ்டைல் மற்றும் பாடிலாங்குவேஜை மாற்றி தன்னை புதிய கோணத்தில் வெளிப்படுத்த திட்டமிட்டுள்ள விஜய், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஒரு போட்டோ ஷூட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். அப்போது மூன்று விதமான கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தப்பட்டு அதில் ஒரு கெட்டப்பில் விஜய்யை நடிக்க வைப்பது என்று முடிவெடுத்துள்ளாராம் டைரக்டர் நெல்சன்.