பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிசில் நடித்திருக்கிறார் காஜல் அகர்வால். இது நாளை(பிப்., 12) ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதில் நடித்திருப்பது குறித்து காஜல் அகர்வால் கூறியதாவது:
பாழைடந்த ஒரு பேய் பங்களாவில் ஒரு தொலைக்காட்சி தொடரை படம்பிடிக்க போகும் குழுவினருக்கு ஏற்படும் அனுபவங்கள் தான் வெப் சீரிசின் கதை. அந்த குழுவில் ஒருத்தியாக நான் நடித்துள்ளேன். நாங்கள் படப்பிடிப்புக்கு தேர்ந்தெடுத்த இடம் மிக மிக பொருத்தமானது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தோழர் ஒருவருடைய வீடு அது. மலையின் உச்சியில் இருக்கும் அந்த வீடு அங்கு தனித்து இருந்த வீடாகும்.
படப்பிடிப்பு பெரும்பாலும் அங்கேயே தான் நடந்தது. படப்பிடிப்புக்கு பின்னரும் அந்த இடம் தந்த அச்சம் காரணமாக என்னால் தூங்க கூட முடியவில்லை. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கூட அந்த வீட்டிலேயே நான் இருப்பதாக ஒரு பிரமை என்னை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது.
அந்த பங்களாவில் நிஜத்தில் பேய் இருக்கும் என்றே நான் கருதினேன். பேய்க்கு பயந்து கொண்டே பேயாக நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அதை இன்று நினைத்தாலும் என் குலை நடுங்குகிறது. தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கும் அந்த உணர்வு உண்டாகும் என்கிறார் காஜல்.
இந்த தொடரில் கயல் ஆனந்தி, ப்ரியங்கா, செல்வா, டேனியல் போப், சுப்பு பஞ்சு மற்றும் பலர் நடித்துள்ளனர்.