சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

இசை அமைப்பாளர்கள் ஹீரோவாகும் காலம் இது. ஏற்கெனவே விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ், ஹிப்ஆப் தமிழா ஆதி, உள்ளிட்ட சிலர் ஹீரோக்களாகி இருக்கிறார்கள். இவர்கள் வரிசையில் பாலாஜி விது தற்போது ஹீரோவாகியிருக்கிறார்.
இவர் தமிழில் இன்பா, சூரன், மஸ்து மஜா மாடி(கன்னடம்) உட்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து தமிழில் வெளியான த்ரிஷா இல்லைனா நயன்தாரா கன்னடா ரீமேக்கில் நடித்து வருகிறார்.
தற்போது கதையின் நாயகனாக தமிழ் படம் ஒன்றில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் நடிக்கிறார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ரங்கா புவனேஷ்வர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகிறது.
இதுகுறித்து பாலாஜி விது கூறியதாவது: நான் நடிக்கலாம் என நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில் தான், இந்த கதையை ரங்கா புவனேஷ்வர் என்னிடம் கூறினார். கதையை கேட்கும்போதே இந்தப்படத்தில் தான் அறிமுகம் ஆகணும் என முடிவு செய்தேன். அதற்காக இரண்டு வருடங்கள் காத்திருந்து இதில் நடித்தேன். திரில்லரும் காதலும் நிறைந்த கதை இது. என்றார்.




