'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் படம் கணேசாபுரம். சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் சார்பில் காசிமாயன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வீராங்கன் இயக்கியுள்ளார். நாயகனாக புதுமுகம் சின்னாவும் நாயகியாக கேரளாவைச் சேர்ந்த ரிஷா ஹரிதாஸ் நடித்துள்ளனர்.
இவர்களுடன் சரவண சக்தி, ராட்சசன் பசுபதி ராஜ், ராஜசிம்மன், கயல் பெரேரா, ஹலோ கந்தசாமி மற்றும் டிக்டாக் ராஜ்பிரியன் ஆகியோர் நடித்துள்ளனர். வாசு ஓளிப்பதிவு செய்துள்ளார், ராஜா சாய் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் வீராங்கன் கூறியதாவது: மதுரை மண்ணின் மையமாகக் கொண்ட இத்திரைப்படம் 90ஸ் காலகட்டத்தில் நடைபெறுவதைப் போல் பயணிக்கிறது. வீரம், காதல், நட்பு என்று ஒரு ஜனரஞ்சகமான கதைக்களத்தை மையமாக வைத்து எடுத்துள்ளோம். சிறு பட்ஜெட்டில் ஒரு கிராமத்து காதல் கதை சொல்கிறோம். என்றார்.