அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகாவின் கையில் இருப்பது மஹா என்ற ஒரே ஒரு படம் தான். இது அவரது 50வது படம். இதைத்தான் அவர் முழுதாக நம்பிக் கொண்டிருக்கிறார். இதில் அவர் தான் சோலோ ஹீரோயின் என்றாலும் அவரது முன்னாள் காதலர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதால் எதிர்ப்பார்ப்பு கொஞ்சம் அதிகரித்திருக்கிறது.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் இசைப் பாடகர் டோனி கக்கார் உருவாக்கியிருக்கும் பூட்டி ஷேக் என்ற இசை ஆல்பத்தில் நடனமாடியுள்ளார். இது குறித்து நடிகை ஹன்ஷிகா மோத்வானி கூறியதாவது:.டோனி கக்கார் உருவாக்கிய பாடலில் நானும் பங்கேற்பது மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. மிகப்பெரும் சாதனைகள் படைத்து வெற்றியின் உச்சத்தில் இருந்தாலும் மிக எளிமையாகவே பழகினார். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் அற்புதமானதாக இருந்தது. இப்பாடல் உருவாகியுள்ள விதம் திருப்தியை அளித்துள்ளது. ரசிகர்களின் வரவேற்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். கண்டிப்பாக அவர்களும் கொண்டாடுவார்கள். என்கிறார் ஹன்சிகா.