இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
மலையாளத்தில் கடந்த 2015ல் பிரித்விராஜை வைத்து 'என்னு நிண்டே மொய்தீன்' என்கிற ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் ஆர்.எஸ்.விமல். அந்தப்படத்தை தொடர்ந்து, வரலாற்று கதாபாத்திரமான மகாபாரத கர்ணனை மையமாக வைத்து பிரித்விராஜ் ஹீரோவாக நடிக்க மகாவீர் கர்ணா என்கிற படத்தை ஆரம்பித்தார். சில காரணங்களால் பிரித்விராஜ், அந்த படத்திலிருந்து விலகிக்கொள்ளவே, அதைத்தொடர்ந்து விக்ரம் நடிப்பில் மீண்டும் அந்த கதையை இந்தி உட்பட மும்மொழிகளில் பிரமாண்டமாக படமாக்கும் வேலைகளில் இறங்கினார் ஆர்.எஸ்.விமல்.
விக்ரமும் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.. ஆனால் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கிய அந்த படத்தின் படப்பிடிப்பு, அதற்குப் பிறகு நடைபெற்றதாக எந்த தகவலும் இல்லை.. அதுமட்டுமல்ல இயக்குனர் ஆர்.எஸ்.விமல், புதிதாக ரொமான்டிக் காமெடி படம் ஒன்றை இயக்க உள்ளார் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென தயாரிப்பாளராக மாறிய ஆர்.எஸ்.விமல் சேத்தி மந்தாரம் துளசி' என்கிற படத்தை தயாரித்து வருகிறார்.
கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க, ஜெய் ஜனார்த்தனன், ராகுல் மற்றும் ஜிம்ஷர் என மூன்று அறிமுக இயக்குனர்கள் இணைந்து இந்தப்படத்தை இயக்கி வருகின்றனர். அப்படி என்றால் மகாவீர் கர்ணா கைவிடப்பட்டு விட்டதா, அல்லது தற்சமயம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதா என்பதை விக்ரம்-ஆர்.எஸ்.விமல் இருவரில் யாரவது ஒருவர் சொன்னால் தான் உண்டு.