பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை நிறுவிய நிறுவனம் சூப்பர்குட் பிலிம்ஸ். அந்நிறுவனத்தின் 90வது படமாக உருவாகியுள்ளது களத்தில் சந்திப்போம். ஜீவா, அருள்நிதி இணைந்து நடித்திருக்கிறார்கள். என்.ராஜசேகர் இயக்கி இருக்கிறார்.
படம் இன்று வெளியாகி உள்ளது. இதுகுறித்து அருள்நிதி அளித்த பேட்டி வருமாறு: நான் நடிக்க ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகிறது. இதுவரை 11 படங்களில் தான் நடித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திற்கும் தேவையான காலஅவகாசம் எடுத்துக் கொள்கிறேன். இந்த ஆண்டுக்குள் இத்தனை படங்கள் நடித்து விட வேண்டும் என்ற எந்த இலக்கும், கணக்கும் என்னிடம் இல்லை. நிறைய கதைகள் கேட்கிறேன். அதில் எனக்கு பிடித்த என்னால் செய்ய முடியும் என்று நினைக்கிற படங்களில் நடிக்கிறேன். நல்ல கதை அமைந்து தயாரிப்பாளர் இல்லாவிட்டால் நானே தயாரிக்கவும் செய்கிறேன்.
களத்தில் சந்திப்போம் படத்தை 90 படங்களை தயாரித்து ஆர்.பி.சவுத்திரி தயாரிக்கிறார். எனது நண்பன் ஜீவா நடிக்கிறார் என்ற உடன் கதைகூட கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டேன். பிறகுதான் கதை கேட்டேன். இயக்குநர் ராஜசேகர் வீட்டுக்கு வந்து கதை சொன்னார். வணிகரீதியான படமாக இருந்தாலும் எல்லா விஷயங்களும் கதைக்குள் கச்சிதமாக வைக்கப்பட்டிருந்தது. அதனால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. இப்படியான படத்தில் இப்போதுதான் முதன் முறையாக நடிக்கிறேன்.
பெரிய ஹீரோ ஒருவருடன் இணைந்து நடிப்பது இது முதல் முறை. அடுத்து டைரி, எருமசாணி விஜய் இயக்கத்தில் ஒரு படம், பின் பிஜி முத்தையா தயாரிப்பில் அரவிந்த் என்கிற புதுமுக இயக்குநரோடு ஒரு படத்தில் நடிக்கிறேன். சீனு ராமசாமியின் படம் பேச்சுவார்த்தை அளவில் மட்டுமே இருக்கிறது. என்றார்.