செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
பிரபலமாக இருக்கும் பல நடிகைகள் சோஷியல் மீடியாவில் தங்களை பற்றியும் தங்கள் படங்கள் பற்றியும் அவ்வப்போது ரசிகர்களிடம் தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சில நடிகைகள் வாரத்திற்கு ஒரு முறையாவது ரசிகர்களுடன் சாட்டிங்கில் ஈடுபடுகின்றனர். அதில் ரசிகர்கள் என்கிற பெயரில் சிலர் எல்லை மீறுவதும் உண்டு.
முகமூடி, மற்றும் புட்டபொம்மா பாடல் புகழ் பூஜா ஹெக்டேவுக்கும் சமீபத்தில் ரசிகர்களுடனான சாட்டிங்கின்போது இப்படி ஒரு தர்மசங்கடம் ஏற்பட்டது. ரசிகர் ஒருவர் பூஜாவிடம், உங்களது நிர்வாண படம் ஒன்றை பதிவிடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு சற்றும் கோபப்படாத பூஜா ஹெக்டே, தனது கால்கள் மட்டும் தெரியும்படியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, “வெறும் கால்கள்” என குறிப்பிட்டு பக்குவமான பதிலடியும் கொடுத்துள்ளார்..