திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? | ஏஆர் முருகதாஸை வறுத்தெடுத்த சல்மான் கான் | காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! |
நடிகர் சிம்புவின் பிறந்தநாளான நேற்று அவர் நடித்து வரும் மாநாடு படத்தின் டீசர் ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது, அதோடு அவர் நடித்துள்ள இன்னொரு படமான 'மஹா' படக்குழுவினர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.. கூடவே சர்ப்ரைஸாக படத்தின் நாயகி ஹன்சிகாவும் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். சிம்புவும் நயன்தாராவும் காதலித்து அதன்பின் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். அதை தொடர்ந்து சிம்பு, ஹன்சிகா இடையே காதல் மலர்ந்து அதுவும் கொஞ்ச காலத்தில் பிரேக் அப் ஆனது..
இருந்தாலும் அதை மனதில் வைத்துக்கொள்ளாமல், ஹன்சிகா நடித்து வரும் மஹா படத்தில் அவருக்கு உதவிசெய்யும் விதமாக சற்றே நீட்டிக்கப்பட்ட கெஸ்ட் ரோலில் சிம்பு நடித்து வருகிறார். இந்தநிலையில் ஹன்சிகா சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருப்பது, மீண்டும் இருவருக்கிடையே காதல் துளிர் விடுகிறதோ என சிம்பு ரசிகர்களை புருவம் உயர்த்த வைத்துள்ளது.
ஹன்சிகாவின் வாழ்த்து குறித்து கருத்து கூறியுள்ள ரசிகர்கள் பலரும், சிம்பு இப்போது தான் தனது திரையுலக பயணத்தில் ஒரு நல்ல நிலைக்கு வந்து கொண்டு இருப்பதாகவும், மீண்டும் அவரை காதல் என்கிற பெயரில் பழைய நிலைக்கு தள்ளிவிட வேண்டாம் என்பது போன்றே விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். இன்னும் சில ரசிகர்களோ, பேசாமல் ஹன்ஷிகா சிம்புவை திருமணம் செய்து கொள்வது தான் சிறந்தது” என்றும் கூறி வருகின்றனர்.