பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. அந்த கால கட்டத்தில் சில புதிய திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின.
முதலில் வந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. அதனால், ஓடிடி தளங்களின் எதிர்காலம் கூட கேள்விக்குறியானது. இந்நிலையில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகி ஓடிடி தளங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் நன்றாக இல்லையே என இழந்த பெருமையை மீட்க அந்தப் படம் பெரிதும் உதவியது.
'சூரரைப் போற்று' படம் வெளியான 24 மணி நேரத்தில் 5 கோடியே 50 லட்சம் பார்வைகளையும், இரண்டு வாரங்களில் 10 கோடி பார்வைகளையும் பெற்றதாக அப்போது செய்திகள் வெளிவந்தன.
அந்த சாதனையை 'மாஸ்டர்' படம் முறியடிக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 'மாஸ்டர்' படம் ஓடிடியில் வெளியான 24 மணி நேரத்தில் 90 லட்சம் பார்வைகளை மட்டுமே பெற்றதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் அப்படம் வெளியான நாளிலிருந்து பலரும் படத்தைப் பார்த்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
'சூரரைப் போற்று' படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானதால் அப்படி ஒரு வரவேற்பைப் பெற்றது. ஆனால், 'மாஸ்டர்' படம் தியேட்டர்களில் இரண்டு வாரங்கள் ஓடிய நிலையில் ஓடிடி தளத்தில் வெளியானது. இருந்தாலும் விஜய் படம் என்பதால் இப்படம் அடுத்த வாரங்களில் மேலும் அதிகப் பார்வைகளைப் பெறும் என்கிறார்கள். இருந்தாலும் 'சூரரைப் போற்று' படத்தின் 10 கோடிக்கும் அதிகமான பார்வை சாதனையை முறியடிக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.




