8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா | ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி | ஏவிஎம் சரவணனுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி | பிளாஷ்பேக்: 2 முறை படமான நல்ல தங்காள் கதை | ஏவிஎம் சரவணன் படத்தயாரிப்பை நிறுத்தியது ஏன்? | கை கட்டியபடி பேசுவார், வெள்ளை உடைகளை விரும்பி அணிவார்: பணிவுக்கும் உபசரிப்புக்கும் புகழ் பெற்ற ஏவி.எம்.சரவணன் | பிரபலங்கள் பட்டியல் 2025: தமிழ் நடிகர்கள், நடிகைகளுக்கு இடமில்லை… |

இந்தியத் திரையுலகமே வியக்க வைக்கும் அளவிற்கு திரும்பிப் பார்க்க வைத்த படம் 'பாகுபலி'. அப்படத்தின் இரண்டு பாக வசூலும் தென்னிந்திய சினிமா மீதான கடந்த கால ஒப்பீட்டை அப்படியே மாற்றியது.
'பாகுபலி' தந்த பாதையில் மற்ற தென்னிந்திய மொழி திரையுலகினரும் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். 'பாகுபலி' அளவிற்கு வசூல் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்ட தமிழ்ப் படமான '2.0' ரசிகர்களையும், தயாரிப்பாளரையும் ஏமாற்றியது.
இருந்தாலும் அடுத்து வந்த கன்னடப் படமான 'கேஜிஎப்', தெலுங்குப் படமான 'சாஹோ', தென்னிந்தியப் படங்களின் வசூல் சாதனையைப் பற்றி இந்தியா முழுவதும் பேச வைத்தது.
கடந்த வருடம் கொரானோ தொற்று காரணமாக பிரம்மாண்டப் படங்கள் வெளிவரவில்லை. அவை இந்த ஆண்டில் வெளிவர உள்ளது. கன்னடத் திரையுலகத்திலிருந்து 'கேஜிஎப் 2', தெலுங்குத் திரையுலகத்திலிருந்து 'ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் சில மாத இடைவெளியில் வெளியாக உள்ளன.
இப்படங்களின் வியாபாரம் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்தப் படங்களின் வட இந்திய உரிமை, வெளிநாட்டு உரிமை, தமிழ் உரிமை ஆகியவை விலை பேசப்பட்டு வருவதாகத் தெரிவிக்கிறார்கள்.
இந்த இரண்டு படங்களின் வசூல், தென்னிந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போகுமென டோலிவுட்டிலும், சாண்டல்வுட்டிலும் பேசிக் கொள்கிறார்கள்.