எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித். நாயகியாக ஹூமா குரேஷி, வில்லனாக கார்த்திகேயா நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. ஆனால் இதுவரை படத்தின் பர்ஸ்ட் லுக்கோ, அல்லது படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு அப்டேட்டும் படக்குழு தரப்பிலிருந்து வெளியாகவில்லை. அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் மட்டுமே வெளியாகின.
படம் பற்றி ஏதாவது ஒரு அப்டேட் கொடுங்கள் என ரசிகர்கள் நச்சரித்து வருகிறார்கள். ஆனால் படக்குழுவோ தொடர்ந்து கப்-சிப் என்ற மனநிலையில் தான் உள்ளனர். சில ஊர்களில் போஸ்டர் அடித்து படத்தின் அப்டேட் என ரசிகர்கள் நச்சரித்தனர். இப்போது ஒரு படி மேலே போய் கடவுளிடம் வேண்டி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு நடத்தி விட்டு, முருகனும், அஜித்தும் இடம்பெற்ற பேனரை ஏந்தியபடி, பிளீஸ்... வலிமைக்கு அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா -என்று முருகனிடம் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். அந்த போட்டோக்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். இப்படிப்பட்ட ரசிகர்களை என்னவென்று சொல்வது.?!