ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி |
தமிழ் சினிமாவில் எப்போதுமே இரண்டிரண்டு நடிகர்களாக போட்டி போடுவதுதான் வழக்கம். எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என்ற வரிசையில் தனுஷ் - சிம்பு என வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.
தனுஷ் தன்னுடைய பாதையை தெளிவாகப் போட்டுக் கொண்டு ஹாலிவுட் வரை முன்னேறிவிட்டார். ஆனால், சிம்புவின் பாதை தடுமாற்றத்துடன் தான் உள்ளது. பொங்கலுக்கு வெளிவந்த 'ஈஸ்வரன்' படம் கூட வசூலுக்கு தடுமாறிக் கொண்டிருப்பதாகத் தகவல்.
அப்படத்தில் தனுஷை உசுப்பேற்றும் வகையில், “ 'நீ அழிக்கிறதுக்காக வந்த அசுரன்னா, நான் காக்கறதுக்காக வந்திருக்கேன்....ஈஸ்வரன்டா' என சிம்பு வசனம் பேசியிருப்பார்.
தனுஷ் நடித்து 2019ல் வெளிவந்த 'அசுரன்' படம் தனுஷுக்கு நல்லதொரு பெயரைப் பெற்றுத் தந்தது. அவருடைய நடிப்பைப் பலரும் பாராட்டினார்கள். அப்படத்தைக் குறிப்பிட்டுத்தான் 'ஈஸ்வரன்' படத்தில் சிம்பு வசனம் பேசியிருப்பார் என்பதை குழந்தையும் சொல்லிவிடும்.
இந்நிலையில் தனுஷ் நேற்று தன்னுடைய டுவிட்டர் புரொபைலில் 'அசுரன்/நடிகர்' என தன் பயோ-வை மாற்றியுள்ளார். 'ஈஸ்வரன்' படத்தில் சிம்பு பேசிய வசனத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் அவர் இப்படி மாற்றியுள்ளதாக ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள்.