தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
அஜித் நடித்த என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் அவரது மகளாக நடித்தவர் அனிகா. அதையடுத்து கவுதம் மேனன் இயக்கிய குயின் வெப்சீரியலில் இளம் வயது ஜெயலலிதாவாக நடித்தார். அடுத்தபடியாக கதாநாயகி வாய்ப்புகளுக்காக படவேட்டை நடத்தி வரும் அனிகா, தனது லேட்டஸ்ட் போட்டோஷுட்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இளவட்டங்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது கறுப்பு நிற உடையணிந்த ஒரு பெண் கவர்ச்சி நடனமாடும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதைப்பார்த்த நெட்டிசன்கள் அது அனிகா தான். அஜித்தின் மகளாக நடித்த பெண்ணா இப்படி ஆட்டம் போடுகிறார்? என்று கண்டபடி கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
இதையடுத்து, அதற்கு விளக்கம் கொடுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் அனிகா. அதில், @@அந்த வீடியோவில் இருப்பது நானல்ல. யாரோ மார்பிங் செய்து அந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். நான் இந்த மாதிரியெல்லாம் பண்ண மாட்டேன் என்று சொல்லி அந்த சர்ச்சைக்கு உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும், அந்த வீடியோ என்னை தொந்தரவு செய்கிறது. என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. மார்பிங் செய்யப்பட்ட அந்த வீடியோவை பார்த்தபோது அதிர்ந்து விட்டேன். சோசியல் மீடியாவில் இருந்து அந்த வீடியோவை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.